Odipolama Tamil movie Review and Stills

0

ஓடிப்போலாமா – திரைவிமர்சனம்
நடிப்பு: பரிமள் , சந்தியா , கோட்டா சீனிவாசராவ், மகாதேவன
இசை : இமான்
இயக்கம் : கண்மணி
படத்தின் அறிமுகநாயகன் பரிமள் ( நடிகை சங்கீதாவின் தம்பி- சித்தி மகன்)
தாயின் பாசத்தில் வளரும் நாயகனுக்கு காதல் ஏற்பட்டால் என்னென்ன விளைவுகள் எல்லாம் ஏற்படும் என்பது தான் ஓடிப்போலாமா படத்தின் கதை. படிப்பில் அரியர் வீட்டில் பொருப்பில்லாமல் ஊர் சுற்றுகிறார் படத்தின் நாயகன் பரிமள். சந்தியாவை பார்த்ததும் காதல் இனி வழக்கமான காதல் கதை தான். நாயகி பரிமளிடம் படித்து முடித்து விட்டு வா அப்புறம் திருமணம் என்று சொல்ல, பரிமள் அரியர் அனைத்தையும் ஒரே மாதத்தில் பாஸ் செய்வது ஒரே பிளாட்டில் கூடி இருக்கும் சந்தியா குடும்பமும் அவரது மாமா குடும்பமும் சொத்துதகராரில் பேசிக்கொள்ளாமல் வாழ்வது சந்தியாவின் முறைப்பையன் தன் நாம் இருவரும் திருமணம் செய்து பிரிந்த குடும்பத்தை சேர்க்கலாம் என்று கூறும் போது திரைக்கதையில் மாற்றம் வருமோ என்று எதிர்பார்த்த நமக்கு ஏமாற்றம் தான். இருவரும் ஊட்டிக்கு செல்ல அவர்களுக்கு தெரியாமல் பரிமள் பின்தொடர வழக்கமாக நடக்கும் சண்டை காட்சிகள் தான். இறுதியில் இரு குடும்பமும் ஒன்று சேர்ந்ததா பரிமள் காதல் ஜெயித்ததா என்பதை திரையில் காட்டியிருக்கின்றனர்.
படத்தின் வேகத்திற்கு திரைக்கதையில் எதுவும் இல்லை என்றாலும் ஒளிப்பதிவாளர் காட்சிகளின் வேகத்தை திரையில் காட்டியிருப்பது சபாஷ் தான். அறிமுக நாயகன் நடிப்பில் பிரமாதமாக இல்லை என்றாலும் தன் திறமையை சரியாக காட்டியிருக்கிறார். சந்தியா படம் முழுக்க மேக்கப்புடன் காட்சி தருவது நமக்கு சலிப்படைய வைக்கிறது.கோட்டா சீனிவாசராவ் தன் பங்கை படத்தில் நேர்த்தியாக காட்டியுள்ளார். ஓளிப்பதிவில் ஊட்டியை கொஞ்சம் வித்தியாசமாக காட்டியிருக்கலாம். இசையில் இமான் தன் பழைய படங்களின் பாடல்களையே நினைவு படுத்துகிறார். ஒரு புது நடிகரை வைத்து படத்தில் குறையில்லாமல் எடுத்திருக்கும் கண்மணி இயக்கம் படத்திற்கு உண்மையிலே பிளஸ் பாய்ண்டு தான். மொத்தத்தில் ஓடிப்போலாமா தயாரிப்பாளருக்கு அடுத்த படம் இனி எடுக்க வேண்டுமா என்று யோசிக்க வைக்கும். நாளுக்கு நாள் பெருகி வரும் வைரஸை நீக்கும் அப்டேசனும் அதனுடன் கொடுக்க வேண்டியிருக்கிறது, நீங்கள் வாரம் ஒரு முறை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் விரைவில் வின்மணியின் புதிய பதிப்பு வெளிவர இருக்கிறது அதில் தானாகவே அப்டேட் ஆகிவிடும்

odipolama5

odipolama6

odipolama2

odipolama3

odipolama1

LEAVE A REPLY