Padmashree for Vijay

0

நடிகர் விஜய்க்கு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் உயர்ந்த சிவிலியன் விருதுகளுள் ஒன்று பத்மஸ்ரீ. இதற்கு அடுத்து பத்மபூஷண், பத்ம விபூஷண், அதி உயர் விருதாக பாரத் ரத்னா வழங்கப்படுகிறது.

நடிகர் கமல்ஹாஸனுக்கு பத்மஸ்ரீ விருதும், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பத்மஸ்ரீயை விட உயர்ந்த பத்மபூஷண் விருதும் வழங்கப்பட்டுள்ளது.

இப்போது நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ விருது வழங்க மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு முடிவு செய்திருப்பதாக நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன.

ஆண்டுதோறும் குடியரசுத் தினத்தை முன்னிட்டு பத்மவிருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டோர் பட்டியலில் தமிழகத்திலிருந்து நடிகர் விஜய் பெயரும் இடம்பெற்றுள்ளதாம்.

ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியில் சேரப்போகிறார் விஜய் என்ற பரபரப்பு கிளம்பியது. அதற்காகவே ராகுல் காந்தியை தேடிச் சென்று பார்த்துவிட்டு வந்தார் விஜய். ஆனால் பின்னர் அவரது ‘காங்கிரஸில் சேரும் படலம்’ பல குழப்பங்கள் நிறைந்ததாக மாறி காமெடி டைம் சமாச்சாரமாகிவிட்டது நினைவிருக்கலாம்!

LEAVE A REPLY