Prakash Raj still love’s his ex-wife and family, special coverage from CM function

0

தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பது இதுதானோ? கலைஞருக்கு நடந்த பாராட்டு விழாவில் லேட்டாக வந்த பல நடிகர் நடிகைகளுக்கு இடமே இல்லை.

Prakash raj and family

உள்ளே வந்து கொண்டே இருந்தவர்களை தடுக்க மெயின் கேட்டையே மூடி விட்டது போலீஸ். விவிஐபி நுழைவு வாயில் வரைக்கும் வந்து விட்ட பலருக்கும் உள்ளே வரவே முடியாதபடி கெடுபிடி. இந்த கெடுபிடியில்தான் சிக்கிக் கொண்டார் பிரகாஷ்ராஜின் முன்னாள் மனைவி லலிதகுமாரியும் குழந்தைகளும்.

அரங்கத்தின் உள்ளேயிருந்து இதை கவனித்துவிட்ட பிரகாஷ்ராஜ், வெளியே ஓடிவந்து தனது மனைவியை உள்ளே அனுப்பும்படி கேட்டுக் கொண்டார் காவலர்களை. ஆனாலும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை.

என் குடும்பம் வெளியில் நிக்குது. கொஞ்சம் உள்ளே விட சொல்லுங்களேன் என்று விழா ஏற்பாட்டாளர்களிடம் திரும்ப திரும்ப அவர் கேட்டுக் கொண்டிருந்தது நெகிழ வைக்கும் காட்சியாக இருந்தது. அவர்கள் உள்ளே வந்ததும்தான் பிரகாஷ்ராஜ் முகத்தில் புன்னகையே வந்தது!

LEAVE A REPLY