Ajith- Jaguar Thangam clash, Police case against Ajith

1
Ajith-Jaguar Thangam

திரைப்பட “ஸ்டண்ட் மாஸ்டர்’ ஜாக்குவார் தங்கத்தின் வீடு மற்றும் கார், அடையாளம் தெரியாத நபர்களால் வியாழக்கிழமை தாக்கப்பட்டது. இது தொடர்பாக நடிகர் அஜீத் மீது ஜாக்குவார் தங்கம், போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். இது குறித்த விவரம்: ஜாக்குவார் தங்கத்தின் வீடு சென்னை எம்.ஜி.ஆர். நகர் அண்ணல் காந்தியடிகள் தெருவில் உள்ளது. படப்பிடிப்பு ஒன்றில் பங்கேற்க ஜாக்குவார் தங்கம் மதுரை சென்றிருந்தார். இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை 2 மணிக்கு அவரது வீடும், காரும் தாக்கப்பட்டதாக போலீஸôருக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக எம்.ஜி.ஆர். நகர் போலீஸôர் விசாரித்து வருகின்றனர். தாக்குதல் குறித்து அறிந்து மதுரையில் இருந்து வியாழக்கிழமை பிற்பகலில் சென்னை திரும்பிய ஜாக்குவார் தங்கம், மாநகரப் போலீஸ் கமிஷனர் டி. ராஜேந்திரனை மாலையில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார். “எனது வீட்டைத் தாக்கியவர்கள், நடிகர் அஜீத்தின் மேலாளர் மற்றும் ரசிகர் மன்ற நிர்வாகிகள் என்று தெரிகிறது. எனவே இந்த விவகாரத்தில் அஜீத் உள்ளிட்ட அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

காரணம் ??

ஜாக்குவர் தங்கம காரை நொறுக்கிய அஜீத் ரசிகர்கள்!
முதல்வருக்கு சினிமாக்காரர்கள் நடத்திய பாராட்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய அஜீத், விழாவில் பங்கேற்கச் சொல்லி நடிகர்கள் மிரட்டப்படுவதாக பேசினார். இதற்கு கைதட்டி பாராட்டு தெரிவித்தார் ரஜினி.

அஜீத்தின் பேச்சு பெரும் பரபரப்பை சினிமா உலகில் ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து ஒரு பத்திரிகைக்குப் பேட்டியளித்த சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் அஜீத்தை தாக்கிப் பேசியிருந்தார்.

எங்கிருந்தோ பிழைக்க வந்த அஜீத் போன்றவர்கள், திடீரென்று உயரத்துக்கு வந்ததும் தொழிலாளர்களை மறந்து விட்டு மனம் போன போக்கில் பேசுகிறார்கள். விழாவில் பேசியதற்கு அஜீத் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருந்தார் ஜாகுவார் தங்கம்.

இது அஜீத் ரசிகர்களைக் கடும் ஆத்திரத்துக்குள்ளாக்கியது. ஜாகுவார் தங்கத்தை எதிர்த்து போஸ்டர்கள் அடித்தனர்.

யாருக்கும் பயப்பட மாட்டேன்…

இந் நிலையில் நடந்த சம்பவம் குறித்து ஜாகுவார் தங்கம் கூறுகையில், “அஜீத் பேசியது அபத்தம். தவறான ஒன்று. அவருக்கு தைரியம் இருந்தால் யார் மிரட்டினார்கள் என்று தைரியமாகச் சொ்ல்ல வேண்டும். அதைவிட்டுவிட்டு பொதுவாக சொல்லி மொத்த திரையுலகுக்கும் கிடைக்கவிருக்கும் நன்மைகளை கெடுத்துவிடக்கூடாது.

இந்த நல்ல நோக்கத்தில்தான் நான் கருத்து சொன்னேன். ஆனால் அஜீத்தோ தன் ரசிகர்களைத் தூண்டிவிட்டு என்னை மிரட்டுகிறார். இதற்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன்…” என்றார்.

1 COMMENT

LEAVE A REPLY